உலக செய்திகள்

டெல்டா வகை கொரோனா அமெரிக்காவிற்கு மிகப்பெரிய சவாலாக விளங்கும் - தொற்று நோய் நிபுணர் கருத்து + "||" + Delta covid variant will be the biggest threat for the US Infectious disease expert

டெல்டா வகை கொரோனா அமெரிக்காவிற்கு மிகப்பெரிய சவாலாக விளங்கும் - தொற்று நோய் நிபுணர் கருத்து

டெல்டா வகை கொரோனா அமெரிக்காவிற்கு மிகப்பெரிய சவாலாக விளங்கும் - தொற்று நோய் நிபுணர் கருத்து
டெல்டா வகை கொரோனா அமெரிக்காவிற்கு மிகப்பெரிய சவாலாக விளங்கக்கூடும் என தொற்று நோய் நிபுணர் டாக்டர். அந்தோணி ஃபாசி கூறியுள்ளார்.
வாஷிங்டன்,

கொரோனா 2வது அலையின் போது உருமாற்றம் அடைந்த, ‘டெல்டா’ வகை வைரஸ், மிக வேகமாக பரவியது. இந்த வைரஸ், டெல்டா பிளஸ் அல்லது ஏஒய்.01 என்ற வைரசாக மேலும் உருமாற்றம் அடைந்து, 3வது அலையை உருவாக்கும் என ஆய்வாளர்கள் சமீபத்தில் தெரிவித்தனர்.

இந்தியாவில் இந்த உருமாற்றம் அடைந்த கொரோனா காரணமாக மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்டது. இதே வகையான கொரோனா தொற்று இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. உலக அளவில் டெல்டா வகை கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவின் தொற்று நோய்கள் மருத்துவ நிபுணர் டாக்டர்.அந்தோணி ஃபாசி, இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், டெல்டா வகை கொரோனா காரணமாக அமெரிக்காவில் கொரோனா நோய்த்தொற்றை முற்றிலும் கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்படலாம் என்று கூறியுள்ளார். இந்த வகை கொரோனாவானது மிக வேகமாக பரவக்கூடியது என்றும் அதிக வீரியம் கொண்டது என்றும் டாக்டர். அந்தோணி தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது அமெரிக்காவில் செலுத்தப்பட்டு வரும் பைசர்/பையோ என்டெக் தடுப்பூசிகள், இந்த உருமாற்றம் அடைந்த கொரோனாவை எதிர்த்து போராடுவதில் நல்ல செயல்திறன் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அமெரிக்காவில் இதுவரை 45 சதவீதம் பேருக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. தடுப்பூசி போட்டுக்கொண்ட அமெரிக்கர்களுக்கு பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்தியது கனடா
செப்டம்பர் 7 ஆம் தேதிக்குப் பிறகு தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக கனடா அரசு அறிவித்துள்ளது.
2. அமெரிக்காவில் புதிய கொரோனா பாதிப்பு இரண்டு மடங்காக அதிகரிப்பு
அமெரிக்காவில் புதிய கொரோனா பாதிப்பு கடந்த 3 வாரங்களாக, நாள்தோறும் இரண்டு மடங்கு அதிகரித்து வருகிறது.
3. ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் நாட்டு மக்களை திரும்ப அழைக்கிறது பிரான்ஸ்
ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் நாட்டு மக்கள் வெளியேறுமாறு பிரான்ஸ் அரசு அறிவுறுத்தியுள்ளது.
4. தென்சீன கடலில் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை சீனா நிறுத்த வேண்டும்: அமெரிக்கா எச்சரிக்கை
தென் சீனக்கடலில் உள்ள பல்வேறு தீவுகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது.
5. சைபர் தாக்குதல்களை தடுக்காவிட்டால் ரஷியா மிகவும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்கா எச்சரிக்கை
ரஷியாவில் இருந்து வரும் சைபர் தாக்குதல்களை தடுக்க முறையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் மிகவும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷியாவை அமெரிக்கா எச்சரித்துள்ளது.