டெல்டா வைரஸ் ஆபத்து: இஸ்ரேலில் மீண்டும் பொது இடங்களில் முககவசம் கட்டாயம்


Image courtesy : AP
x
Image courtesy : AP
தினத்தந்தி 26 Jun 2021 12:28 PM GMT (Updated: 26 Jun 2021 12:28 PM GMT)

இஸ்ரேலில் டெல்டா வைரஸ் காரணமாக, மீண்டும், பொது இடங்களில் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

டெல்அவிவ்

மிகவும் ஆபத்தான டெல்டா பிளஸ் மரபணு மாற்ற வைரஸ் மிக விரைவாக பரவுவதால், இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் கூட தொடர்ந்து முககவசம் அணிய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில்  இஸ்ரேலில் டெல்டா வைரஸ் காரணமாக, மீண்டும், பொது இடங்களில் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் கொரோனா பரவல் குறைந்து வந்ததையடுத்து, பொது இடங்களில் முககவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் கடந்த 15 ஆம் தேதி முதல் நீக்கப்பட்டன. இந்நிலையில் அங்கு ஒரே வாரத்தில் 138 பேர் டெல்டா வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதையடுத்து, மீண்டும், முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சுமார் 90 லட்சம் மக்கள் தொகை கொண்ட இஸ்ரேலில் 55சதவீதத்தினர் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.


Next Story