ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,223 பேருக்கு கொரோனா


ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,223 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 26 Jun 2021 10:08 PM GMT (Updated: 26 Jun 2021 10:09 PM GMT)

அமீரகத்தில் தற்போது 19,442 பேர் கொரோனா பாதிப்பிற்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

அபுதாபி,

ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில், 2,93,212 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகள் செய்யப்பட்டதில் 2,223 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,22,532 ஆக உயர்ந்தது. 

இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மீண்டும் 2 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று மட்டும் 2,177 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 6,01,308 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று 7 பேர் பலியானார்கள். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,782 ஆக உயர்ந்துள்ளது. அமீரகத்தில் தற்போது 19,442 பேர் கொரோனா பாதிப்பின் காரணமாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story