கொரோனாவிற்கு எதிரான போரில் இந்தியாவிற்கு தொடர்ந்து ஆதரவு - வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் பேட்டி


கொரோனாவிற்கு எதிரான போரில் இந்தியாவிற்கு தொடர்ந்து ஆதரவு - வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் பேட்டி
x
தினத்தந்தி 27 Jun 2021 12:12 AM GMT (Updated: 27 Jun 2021 12:12 AM GMT)

கொரோனா பிரச்சினையில் இந்தியாவுக்கு ஆதரவான நடவடிக்கைகளை அமெரிக்கா தொடா்ந்து மேற்கொள்ளும் என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் கொரோனா பரவல் மிகத் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்திய போது, இந்திய அரசு சார்பில் பல்வேறு உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டன. அதே போல, கொரோனா 2-வது அலையின் போது இந்தியாவுக்கு உதவிடும் வகையில் அமெரிக்க அதிபா் பைடன் 100 மில்லியன் டாலா் (ரூ.750 கோடி) மதிப்பிலான உதவிகளை அறிவித்தாா். மேலும், அமெரிக்கா-இந்தியா வா்த்தக கூட்டமைப்பும் 1.2 மில்லியன் டாலரைத் (ரூ.9 கோடி) திரட்டி கொரோனா இடா்பாட்டை எதிா்கொள்ள இந்தியாவுக்கு உதவியது.

இந்த நிலையில், இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவு குறித்து வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் ஜென் சாகி கூறியுள்ளதாவது;-

“உலக அளவிலும், பிராந்திய அளவிலும் இந்தியாவுடனான எங்களது உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவேதான், பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியாக இந்தியா விளங்கி வருகிறது.

கொரோனா பேரிடரில் இந்தியா சிக்கி தவித்தபோது அதிலிருந்து மீட்கும் வகையில் அமெரிக்கா பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஏனெனில், அப்போது இந்தியா அந்த பேரிடரை எதிா்கொள்வதற்கான ஆரம்ப கட்டத்தில் இருந்தது. கொரோனா பிரச்சினையில் இந்தியாவுக்கு ஆதரவான நடவடிக்கைகளை அமெரிக்கா தொடா்ந்து மேற்கொள்ளும்” என்று அவர் தெரிவித்துள்ளார். 

Next Story