3-வது அலை அச்சுறுத்தல்; தென் ஆப்பிரிக்காவில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்


3-வது அலை அச்சுறுத்தல்; தென் ஆப்பிரிக்காவில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்
x
தினத்தந்தி 27 Jun 2021 11:24 PM GMT (Updated: 27 Jun 2021 11:24 PM GMT)

தென் ஆப்பிரிக்காவில் டெல்டா வகை கொரோனா பரவியுள்ளது. அந்நாட்டில் 5 பேர் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரிட்டோரியா,

தென் ஆப்பிரிக்காவில் டெல்டா வகை கொரோனா பரவியுள்ளது. அந்நாட்டில் 5 பேர் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மூன்றாவது அலை பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில்  தென் ஆப்பிரிக்காவில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜுலை 28 ஆம் தேதி முதல் அடுத்த 14 நாட்களுக்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 

மாகாணங்களுக்கு இடையே பயணக்கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.  இரவு 9 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  திருமணம் மற்றும் இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் 50 பேருக்கு மேல் கலந்து கொள்ளக் கூடாது எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி போடும் பணியும் விரைவு படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

Next Story