உலக செய்திகள்

சிரியா, ஈராக் எல்லையில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல் + "||" + US Strikes Near Syria-Iraq Border Kill 5 Militia Fighters: War Monitor

சிரியா, ஈராக் எல்லையில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல்

சிரியா, ஈராக் எல்லையில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல்
சிரியா, ஈராக் நாடுகளின் எல்லை பகுதிகளில் அமெரிக்க ராணுவம் வான்வழித்தாக்குதல் நடத்தி உள்ளது.
வாஷிங்டன்,

ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது, ஆளில்லா விமானங்கள் மூலம் ஈரான் பயங்கரவாத அமைப்புகள் தொடர் தாக்குதலை நடத்தி வருவதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்காவின் ராணுவ மையமான பென்டகன் தெரிவித்துள்ளது. பயங்கரவாத மையங்களாகவும், ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ள இடங்களாகவும் செயல்பட்ட இடங்கள் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் 2 இடங்கள் மற்றும் ஈராக்கில் ஒரு இடத்திலும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உத்தரவுப்படி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்கள், காயம் அடைந்தவர்கள் பற்றிய விவரங்கள் தகவல் ஏதும் வெளியாகவில்லை. கடந்த 5 மாதங்களில், ஈரான் பயங்கரவாத அமைப்புகள் மீது அமெரிக்கா நடத்தும் 2 ஆவது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

சிரியாவில் 2 இடங்களிலும் ஈராக்கில் ஒரு இடத்திலும் அதிபர் ஜோ படைனின் உத்தரவுப்படி தாக்குதல் நடத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


தொடர்புடைய செய்திகள்

1. புதினுடன் சிரியா அதிபர் சந்திப்பு : கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை
சிரியாவில் உள்ள கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்துவது குறித்து அந்நாட்டு அதிபர் ரஷிய அதிபர் புதினுடன் ஆலோசனை நடத்தினார்.
2. சிரியாவில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் - ஐ.நா. சபை தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு
சிரியாவில் போர் நிறுத்தப்பட்டு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3. சிரியாவில் உள்ள அமெரிக்க படைத்தளம் மீது ராக்கெட் தாக்குதல்
சிரியாவில் உள்ள அமெரிக்க படைத்தளம் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
4. சிரியா மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் - 11 பேர் பலி
சிரியா மீடு இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
5. சிரியாவில் அதிபர் தேர்தல்: பதவியை தக்க வைத்தார் பஷார் அல் அசாத்
தொடர்ந்து 4-வது முறையாக சிரிய அதிபராக பஷார் அல் அசாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.