உலக செய்திகள்

லண்டனில் ரெயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து + "||" + London: 100 firefighters called to 'serious' blaze near Elephant and Castle railway station

லண்டனில் ரெயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து

லண்டனில் ரெயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து
உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கு தீ கட்டுக்குள் வந்ததாக தீ அணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
லண்டன்,

இங்கிலாந்து தலைநகர் லண்டனின் தென்கிழக்கு  பகுதியான நியுவிங்டன் என்ற இடத்தில் அமைந்துள்ள  எலிபண்ட் அன்ட் காசல் ரெயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.   தீ விபத்தில் ரெயில்வே வளைவுகளுக்கு(arches) அருகே இருந்த மூன்று வணிக வளாகங்கள், 6 கார்கள், மற்றும் தொலைபேசி பெட்டி முற்றிலும் எரிந்து நாசமாகியது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த 15 தீயணைப்பு வண்டிகளும், 100 தீயணைப்பு வீரர்களும் தீயை அணைக்க போராடினர். அப்பகுதி முழுக்க கரும்புகை பரவி வருவதால் அருகே இருக்கும் வீடுகளில் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூட வலியுறுத்தப்பட்டிருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான காட்சிகள் அதிகம் பகிரப்பட்டன.

உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கு  தீ கட்டுக்குள் வந்ததாக தீ அணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 


தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தின் புதிய கொரோனா பயண விதிகள் இந்தியர்கள் பாதிப்பு ; இந்தியா பேச்சு வார்த்தை
இங்கிலாந்து வரும் இந்திய பயணிகள் 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்கள் தடுப்பூசி செலுத்தாதவர்களாகவே கருதப்படுவார்கள் என்ற இங்கிலாந்து அரசின் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது.
2. இங்கிலாந்தில் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
இங்கிலாந்தில் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
3. இங்கிலாந்தில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 36,100 பேருக்கு தொற்று
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36,100 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ரத்து: இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்வதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
5. இங்கிலாந்தில் புதிதாக 29,612 பேருக்கு கொரோனா பாதிப்பு
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 29,612 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.