அமெரிக்க அடுக்குமாடி குடியிருப்பு விபத்து - 10 பேர் பலி


அமெரிக்க அடுக்குமாடி குடியிருப்பு விபத்து - 10 பேர் பலி
x
தினத்தந்தி 28 Jun 2021 8:51 PM GMT (Updated: 28 Jun 2021 8:51 PM GMT)

அமெரிக்க அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் மியாமி நகரில் கடற்கரைக்கு அருகே உள்ள சர்ப்சைட் என்ற இடத்தில் கடந்த 1981-ம் ஆண்டு கட்டப்பட்ட 12 மாடிகளை கொண்ட குடியிருப்பு கட்டிடத்தின் ஒரு பகுதி கடந்த வியாழக்கிழமை திடீரென இடிந்து விழுந்தது. 

கட்டிட விபத்து ஏற்பட்டபோது அந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் 285-க்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்டனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதுவரை 135 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், 151 பேர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்புக்குழுவினர்,

மோப்ப நாய் மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த கட்டிட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகளை 6வது நாளாக அதிகாரிகள் முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றனர்.

கட்டிடத்தின் கட்டமைப்பு சேதமடைந்த நிலையில் இருந்ததும், அது குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்ட போது கட்டிடத்தை மறுசீரமைக்காமலும், அதை பொருட்படுத்தாமலும் இருந்ததுமே இந்த விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

Next Story