உலக செய்திகள்

தென்ஆப்பிரிக்காவில் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு: கட்டுப்பாடுகள் அதிகரிப்பு + "||" + Delta Variant Driving Covid Third Wave In South Africa

தென்ஆப்பிரிக்காவில் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு: கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

தென்ஆப்பிரிக்காவில் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு: கட்டுப்பாடுகள் அதிகரிப்பு
தென்ஆப்பிரிக்காவில் டெல்டா வகை கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
ஜோகன்னஸ்பர்க், 

தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரசின் 2-ம் அலை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய சூழலில், கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் வைரஸ் பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அங்கு மீண்டும் வைரஸ் பரவல் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக முதன் முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா வைரஸ் அங்கு வேகமாக பரவி வருகிறது.

எனவே வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அந்த நாட்டு அரசு கொரோனா கட்டுப்பாடுகளை மீண்டும் கடுமையாக்கியுள்ளது. அங்கு 4-ம் நிலை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி பொது வெளியிலேயே அல்லது பூட்டப்பட்ட அறைக்குள்ளே அரசியல், கலாசாரம் சமூகம் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களை நடத்த முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மது விற்பனைக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இரவு 9 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வருதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்கக் கண்டத்தில் இதுவரை 40 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். ஆப்பிரிக்கக் கண்டத்தைப் பொறுத்தவரை தென் ஆப்பிரிக்கா, மொராக்கோ, துனிசியா, எத்தியோபியா, எகிப்து ஆகிய நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. 

முன்னதாக இது குறித்து அதிபர் ரமாபோசா தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு அளித்த பேட்டியில், “சமூக பரவலை தடுக்க வேண்டும், அதே நேரம் நாட்டின் பொருளாதாரமும் காக்கப்பட வேண்டும். எனவே ஊரடங்கு விதிகளை தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இப்போது மூன்றாம் அலையை எதிர்கொண்டுள்ளோம். இது பெரிய சவால். தொற்றுநோய்ப் பரவல் பேரிழப்பைத் தரும். 14 நாட்களுக்கு பிறகு ஊரடங்கை தளர்த்தலாமா? என்பது குறித்து முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்திருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் மேலும் 9,361 பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,361- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. மராட்டியத்தில் இன்று முதல் திரையரங்குகள் திறப்பு
மராட்டியத்தில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
3. ரஷ்யாவில் மேலும் உயர்ந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 36,339 பேருக்கு தொற்று
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36,339 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. இந்தியாவில் நேற்றைய கொரோனா பாதிப்பை விட இன்றைய பாதிப்பு சற்று அதிகரிப்பு
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரித்துள்ளது.
5. இங்கிலாந்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 49,139 பேருக்கு தொற்று
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 49,139 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.