உலக செய்திகள்

காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் வான்தாக்குதல் + "||" + Israeli army resume airstrikes on Gaza City

காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் வான்தாக்குதல்

காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் வான்தாக்குதல்
ஜெருசலேம் நகரம் யாருக்கு சொந்தம் என்பதில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடிக்கும் சூழலில், இந்த விவகாரம் தொடர்பாக பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகிக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே கடந்த மே மாதம் 10-ந் தேதி பயங்கர மோதல் வெடித்தது.

இரு தரப்புக்கும் இடையில் 11 நாட்களாக இடைவிடாமல் நீடித்த இந்த சண்டையில் 250-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். சுமார் 3 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்தனர். சர்வதேச சமூகத்தின் தொடர் அழுத்தத்துக்கு பின்னர் மே மாதம் 21-ந் தேதி இரு தரப்பும் சண்டை நிறுத்தத்தை அறிவித்தன. இந்த நிலையில் ஹமாஸ் போராளிகள் காசா நகரில் இருந்து இஸ்ரேல் நாட்டின் தெற்குப் பகுதியை குறிவைத்து வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட பலூன்களை பறக்க விட்டனர்.இந்த பலூன்கள் விழுந்து வெடித்து சிதறியதில் பல இடங்களில் தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஹமாஸ் போராளிகளின் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா நகர் மீது மீண்டும் வான் வழி தாக்குதலை நடத்தியது. அங்கு ஹமாஸ் போராளிகளின் ஆயுத உற்பத்தி தளத்தைக் குறிவைத்து போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. எனினும் இந்த வான் தாக்குதலில் ஏற்பட்ட சேத விபரங்கள் பற்றி இஸ்ரேல் ராணுவம் குறிப்பிடவில்லை. சண்டை நிறுத்தத்துக்கு பிறகு காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் இப்படி வான்வழி தாக்குதல் நடத்துவது இது 3-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. போலீஸ்காரர் மீது தாக்குதல்
மானாமதுரையில் போலீஸ்காரர் மீது தாக்குதல் நடத்திய 3 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
2. நிதி நிறுவன ஊழியரை மரத்தில் கட்டி வைத்து தாக்குதல்
நிதி நிறுவன ஊழியரை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.
3. பெண் மீது தாக்குதல்; கணவருக்கு வலைவீச்சு
பெண் மீது தாக்குதல் நடத்திய கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4. காதலன் வீட்டுக்கு மாப்பிள்ளை கேட்டு சென்ற பெண்-அக்காள்கள் மீது தாக்குதல்
வேப்பனப்பள்ளி அருகே காதலன் வீட்டுக்கு மாப்பிள்ளை கேட்டு சென்ற பெண்-அக்காள்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
5. மதுக்கடை விற்பனையாளர் மீது தாக்குதல்
காரைக்குடியில் மதுக்கடை விற்பனையாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.