உலக செய்திகள்

சீனாவின் அணு ஆயுத குவிப்பு கவலை அளிக்கிறது: அமெரிக்கா + "||" + U.S. Calls Build-Up of China's Nuclear Arsenal 'Concerning'

சீனாவின் அணு ஆயுத குவிப்பு கவலை அளிக்கிறது: அமெரிக்கா

சீனாவின் அணு ஆயுத குவிப்பு கவலை அளிக்கிறது: அமெரிக்கா
சீனா 100-க்கும் மேற்பட்ட அணு ஆயுத ஏவுகணை கிடங்குகளை வைத்திருப்பதாக அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் அண்மையில் செய்தி வெளியிட்டது.
சீனாவின் மேற்கு பாலைவன பகுதியில் ஏவுகணை கிடங்குகள் அமைக்கப்பட்டிருப்பதை செயற்கைக்கோள் புகைப்படங்கள் காட்டியதை சுட்டிக்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டது. இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைசிடம் நிருபர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த நெட் பிரைஸ் சீனா அணு ஆயுதங்களைக் குவித்து வருவது கவலை தருவதாக தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘‘சீனா மிக விரைவாக அணு ஆயுதங்களை குவித்து வருவதை சில செய்திகளும் வேறு சில நடவடிக்கைகளும் காட்டுகின்றன. இதுபோன்ற ஆயுதக் குவிப்பை அவ்வளவு எளிதாக மறைத்துவிட முடியாது’’ என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா காலத்தில் அமெரிக்கா பெரும் பாதிப்புகளை சந்தித்தபோது இந்தியா உதவியது: ஆண்டனி பிளிங்கன்
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளாக இந்தியா மற்றும் அமெரிக்கா திகழ்வதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
2. ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ் இறுதிப்போட்டியில் இருந்து நடப்பு சாம்பியன் திடீர் விலகல்
தனது மன ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இறுதிப்போட்டியில் இருந்து விலகியதாக அமெரிக்காவின் சிமோன் பைல்ஸ் தெரிவித்துள்ளார்.
3. ஈராக்கில் அமெரிக்காவின் போர் நடவடிக்கை இந்த ஆண்டு இறுதியில் நிறைவு: ஜனாதிபதி ஜோ பைடன்
ஐ.எஸ். பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டையிடுவதற்காக அமெரிக்கா கடந்த 2014-ம் ஆண்டு ஈராக் நாட்டுக்கு தனது படைகளை அனுப்பியது. அமெரிக்க படைகளின் உதவியுடன் ஈராக் ராணுவம் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தை கட்டுக்குள் கொண்டுவந்தது. ஐ.எஸ். பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டதாக கடந்த 2017-ம் ஆண்டு‌ ஈராக் அறிவித்தது.
4. தடுப்பூசி போட்டுக்கொண்ட அமெரிக்கர்களுக்கு பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்தியது கனடா
செப்டம்பர் 7 ஆம் தேதிக்குப் பிறகு தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக கனடா அரசு அறிவித்துள்ளது.
5. அமெரிக்காவில் புதிய கொரோனா பாதிப்பு இரண்டு மடங்காக அதிகரிப்பு
அமெரிக்காவில் புதிய கொரோனா பாதிப்பு கடந்த 3 வாரங்களாக, நாள்தோறும் இரண்டு மடங்கு அதிகரித்து வருகிறது.