உலக செய்திகள்

ஜப்பானில் நிலச்சரிவு: 20 பேர் மாயம் என தகவல் + "||" + landslide engulfs houses and leaves 19 people missing in Japan 's Shizuoka region

ஜப்பானில் நிலச்சரிவு: 20 பேர் மாயம் என தகவல்

ஜப்பானில் நிலச்சரிவு: 20 பேர் மாயம் என தகவல்
ஜப்பானில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 20 பேரை காணவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
டோக்கியோ,

ஜப்பானின் அடாமி பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை 10.30 மணியளவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவால்,  மலைப்பகுதியில் இருந்த குடியிருப்புகள் அனைத்தும் மண்ணுக்குள் புதைந்தது. குடியிருப்புகளில் வசித்து வந்த 20 பேரைக் காணவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 2 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும், அப்பகுதியில் உள்ள அனைத்து மின் கம்பங்களும் சரிந்து விழுந்ததால் 200க்கும் அதிகமான வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே, மீட்புப் பணிகளில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.