உலக செய்திகள்

இங்கிலாந்தில் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 24,885 பேருக்கு தொற்று உறுதி + "||" + Britain records 24,885 new COVID cases, 18 deaths

இங்கிலாந்தில் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 24,885 பேருக்கு தொற்று உறுதி

இங்கிலாந்தில் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 24,885 பேருக்கு தொற்று உறுதி
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,885 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
லண்டன்,

இங்கிலாந்தில் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் அங்கு தற்போது அதிகரித்து வரும் டெல்டா வகை கொரோனா பரவலால் ஊரடங்கு தளர்வுகளை மேலும் ஒரு மாதத்திற்கு இங்கிலாந்து அரசு தள்ளிவைத்துள்ளது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,885 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 48,79,616 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 28 ஆயிரத்து 207 ஆக உயர்ந்துள்ளது. 

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 43 லட்சத்து 32 ஆயிரத்து 181 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 4,19,228  பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

கொரோனா அச்சம் காரணமாக பல்வேறு நாடுகளில் இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகள், உருமாறிய கொரோனாவிற்கு எதிராக திறம்பட செயல்படக் கூடியது என்றும் விரைவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் என்றும் இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,606 பேருக்கு கொரோனா பாதிப்பு
கர்நாடகாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,606 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. இங்கிலாந்தில் குறைய தொடங்கிய கொரோனா பாதிப்பு: புதிதாக 24,950 பேருக்கு தொற்று
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,950 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
3. தமிழகத்தில் புதிதாக 1,785 பேருக்கு கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. மலேசியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா; 17,045 பேருக்கு பாதிப்பு
மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத வகையில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டுள்ளது.
5. தமிழகத்தில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 1,819 பேருக்கு தொற்று!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,819 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.