உலக செய்திகள்

கனடாவில் ஒரே வாரத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் 719 பேர் உயிரிழப்பு + "||" + In Canada, 719 people died in a single week due to the scorching sun

கனடாவில் ஒரே வாரத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் 719 பேர் உயிரிழப்பு

கனடாவில் ஒரே வாரத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் 719 பேர் உயிரிழப்பு
கனடா நாட்டின் மேற்கு பிராந்தியத்தில் கடந்த ஒரு வார காலமாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் தொடர்ந்து வெப்ப அலை வீசி வருகிறது.
அங்குள்ள லிட்டன் என்கிற கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இதுவரை இல்லாத வகையில் 49.6 செல்சியஸ் டிகிரி வெப்பம் பதிவானது. தொடர்ந்து அதிகரித்து வரும் வெப்பநிலையால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். மேலும் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கொரனோ தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனிடையே முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் வெயிலின் தாக்கத்தை தாக்கு பிடிக்க முடியாமல் உயிரிழந்து வருகின்றனர். அந்த வகையில் பிரிட்டிஷ் கொலம்பியா 
மாகாணத்தில் கடந்த மாதம் 25-ந் தேதி தொடங்கி 7 நாட்களில் மட்டும் 719 பேர் சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாக உயிரிழந்துள்ளனர். இது வழக்கத்தை விட 3 மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில் கொளுத்தும் வெயில் காரணமாக லிட்டன் கிராமத்தில் ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. காட்டுத்தீ அந்த கிராமத்தில் பெரும் பொருள் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. கனடாவில் மோசமான வானிலையால் சுமார் 300 -இடங்களில் காட்டுத்தீ
கனடாவில் மோசமான வானிலையால் சுமார் 300 இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது.
2. தடுப்பூசி போட்டுக்கொண்ட அமெரிக்கர்களுக்கு பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்தியது கனடா
செப்டம்பர் 7 ஆம் தேதிக்குப் பிறகு தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக கனடா அரசு அறிவித்துள்ளது.
3. பிரிட்டிஷ் கொலம்பியாவில் ராட்சத கட்டுமான கிரேன் சரிந்து விபத்து: பலர் உயிரிழந்ததாக அச்சம்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் ராட்சத கட்டுமான கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
4. கனடாவில் பள்ளிக்கூடம் அருகே 200 கல்லறைகள் கண்டுபிடிப்பு
கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் செயல்பட்ட செயின்ட் யூஜின்ஸ் என்ற உறைவிட பள்ளி அருகே 182 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன
5. கனடாவில் சுட்டெரித்துவரும் வெயிலில் சிக்கி 486 பேர் பலி
கனடாவில் சுட்டெரித்துவரும் வெயிலில் சிக்கி 486 பேர் உயிரிழந்துள்ளனர்.