உலக செய்திகள்

அமீரகத்தில் 19,849 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர் + "||" + There are 19,849 people in the UAE undergoing corona treatment

அமீரகத்தில் 19,849 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்

அமீரகத்தில் 19,849 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்
அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 91 ஆயிரத்து 676 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதன் முடிவுகளில் 1,632 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 37 ஆயிரத்து 877 ஆக உயர்ந்தது.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று ஒரே நாளில் 1,561 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 16 ஆயிரத்து 197 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று மட்டும் 6 பேர் பலியானார்கள். இதனால் அமீரகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,831 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 19 ஆயிரத்து 849 பேர் கொரோனா பாதிப்பின் காரணமாக பல்வேறு மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுமக்கள் தொடர்ந்து முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பராமரித்து கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறுவோருக்கான கட்டணம் மாற்றியமைப்பு - தமிழக அரசு
தனியார் மருத்துவமனைகளில் முதல்-அமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சை பெறுவோருக்கான கட்டணம் மாற்றியமைத்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
2. அமீரகத்தில் ‘கிளவுட் சீடிங்’ முறையால் மழைப்பொழிவு அதிகரிப்பு; தேசிய வானிலை மைய அதிகாரிகள் தகவல்
அமீரகத்தில் ‘கிளவுட் சீடிங்’ முறையானது மழைப்பொழிவை அமீரகத்தில் அதிகரித்து வருகிறது.
3. அமீரகத்தில் புதிதாக 1,520 பேருக்கு கொரோனா
அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
4. அமீரகத்தில் ‘மாடர்னா’ கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்
அமீரகத்தில் புதிதாக ‘மாடர்னா’ கொரோனா தடுப்பூசிக்கு சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
5. ஆக்சிஜன் 90-க்கு கீழ் இருந்தால் மட்டுமே கொரோனா சிகிச்சை: புதிய வழிகாட்டு நெறிமுறைகள்
ஆக்சிஜன் 90-க்கு கீழ் இருந்தால் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை தர வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.