உலக செய்திகள்

அமீரகத்தில் ‘மாடர்னா’ கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் + "||" + UAE approves Moderna COVID-19 vaccine for emergency use

அமீரகத்தில் ‘மாடர்னா’ கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்

அமீரகத்தில் ‘மாடர்னா’ கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்
அமீரகத்தில் புதிதாக ‘மாடர்னா’ கொரோனா தடுப்பூசிக்கு சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து அந்த அமைச்சகத்தின் உதவி செயலாளர் டாக்டர் அமின் ஹுசைன் அல் அமிரி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

‘மாடர்னா’ தடுப்பூசி
அமீரகத்தில் பைசர் பயோஎன்டெக், ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனகா, ஸ்புட்னிக் வி மற்றும் சினோபார்ம் ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது 5-வதாக மாடர்னா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராக 94 சதவீத செயல்திறனுடன் செயல்படக்கூடியது.அமீரகத்தில் ‘மாடர்னா’ கொரோனா தடுப்பூசியின் அவசர பதிவு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அமீரகத்தில் பயன்படுத்த அந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் உள்ள அரசு சுகாதாரத்துறைகள் இந்த தடுப்பூசி மருந்தை இறக்குமதி செய்துகொள்ளலாம்.இந்த மருந்தை உடலில் செலுத்திக்கொள்வதன் மூலம் கொரோனா வைரசை தடுப்பது மட்டுமல்லாமல், மருத்துவமனைக்கு செல்லாமல் நோயாளிகளை தீவிர தொற்றில் இருந்து பாதுகாக்க முடியும்.

அங்கீகாரம் பெற்றது
அமீரகத்தில் மெஜெந்தா இன்வெஸ்ட்மென்ட்ஸ் என்ற வினியோக நிறுவனத்திடம் இதன் விற்பனைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் மாடர்னா நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளது.நாட்டில் தற்போது பரவலாக சினோபார்ம் மற்றும் ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனகா ஆகிய தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. மாடர்னா தடுப்பூசியானது பைசர் பயோஎன்டெக் மருந்தை போன்றது. இதில் வைரசின் புரத பொருளான எம் ஆர்.என்.ஏ. கொரோனா வைரசின் உடலில் உள்ள முட்கள் போன்ற அமைப்பை செயலிழக்கச்செய்கிறது.மேலும் இந்த வைரஸ் பிரதியெடுத்து எண்ணிக்கையை அதிகரிப்பதை தடை செய்கிறது. கடந்த டிசம்பர் மாதம் 18-ந் தேதி அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பின் அங்கீகாரத்தை பெற்றது.

4 வாரங்களுக்கு இடையில்
இந்த மாடர்னா கொரோனா தடுப்பூசியானது இரண்டு டோஸ்களை கொண்டது. 4 வாரங்களுக்கு இடையில் இந்த தடுப்பூசி டோஸ்கள் போடப்படும். இரண்டாவது டோசை உடலில் செலுத்திக்கொண்ட உடன் இதன் செயல்திறன் மற்றும் நோய் எதிர்ப்புத்தன்மை 94.1 சதவீதமாக உள்ளது. குறிப்பாக தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளில் உருமாறிய வகைகளான 
பி.1.351 (பீட்டா) மற்றும் பி.1 (காமா) ஆகிய வகைகளில் மிகுந்த செயல்திறனுடன் கட்டுப்படுத்தியது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அமீரகத்தில் ‘கிளவுட் சீடிங்’ முறையால் மழைப்பொழிவு அதிகரிப்பு; தேசிய வானிலை மைய அதிகாரிகள் தகவல்
அமீரகத்தில் ‘கிளவுட் சீடிங்’ முறையானது மழைப்பொழிவை அமீரகத்தில் அதிகரித்து வருகிறது.
2. அமீரகத்தில் புதிதாக 1,520 பேருக்கு கொரோனா
அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
3. அமீரகத்தில் 19,849 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்
அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
4. அமீரகத்தில் இருந்து 140 மெட்ரிக் டன் ஆக்சிஜன் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது; இந்திய தூதர் பவன் கபூர் தகவல்
அமீரகத்தில் இருந்து 140 மெட்ரிக் டன் ஆக்சிஜன் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது என்று இந்திய தூதர் பவன் கபூர் தெரிவித்தார்.
5. சூரியனுக்கு எதிரே தோன்றும் பிரமாண்ட நிலவு; அமீரகத்தில் இன்று வானில் தெரிகிறது
சூரியனுக்கு எதிரே வரும் நிலவின் பிரமாண்ட தோற்றம் அமீரகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) வானில் தெரிகிறது.