இஸ்ரேலில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு


இஸ்ரேலில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
x
தினத்தந்தி 5 July 2021 3:00 AM GMT (Updated: 5 July 2021 3:00 AM GMT)

இஸ்ரேலில் மொத்த மக்கள் தொகையில் 60.5 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

ஜெருசலேம்,

இஸ்ரேலில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 2,438- ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் 17- ஆம் தேதிக்கு பிறகு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை இந்த அளவுக்கு உயர்வது இதுதான் முதல் தடவையாகும். 

அந்நாட்ட்டில் இதுவரை இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 42 ஆயிரத்து 890- ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பாதிப்பு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6,428- ஆக உயர்ந்துள்ளது. தீவிர பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 31 முதல் 34 ஆக உள்ளது. 

கொரோனா தொற்றில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 34 ஆயிரத்து 024-ஆக உள்ளது. இஸ்ரேலில் மொத்த மக்கள் தொகையில் 60.5 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

Next Story