உலக செய்திகள்

வங்காளதேசத்தில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு + "||" + Bangladesh extends lockdown to combat Covid-19 surge

வங்காளதேசத்தில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு

வங்காளதேசத்தில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு
வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு அங்கு கடந்த 1ந் தேதி நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
டாக்கா, 

நமது அண்டை நாடான வங்காள தேசத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமாக இருந்து வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு அங்கு கடந்த 1ந் தேதி நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு நாளையுடன் (புதன்கிழமை) முடிவடைய இருந்தது. இந்த நிலையில் நேற்று அங்கு கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு புதிய உச்சத்தை எட்டியது.

கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 9 ஆயிரத்து 964 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் 164 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள்.

இதுவரை இல்லாத வகையில் தினசரி கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு புதிய உச்சத்தை எட்டியது முழு ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய கட்டாயத்துக்கு அரசை கொண்டு சென்றது. அதன்படி நாளையுடன் முடிவடைய இருந்த நாடு தழுவிய முழு ஊரடங்கை வருகிற 14-ந் தேதி வரை, மேலும் 7 நாட்களுக்கு நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. வங்காளதேசத்திற்கு எதிரான டி20; நியூசிலாந்து அணி மீண்டும் தோல்வி
வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் நியூசிலாந்து அணி தோல்வியை சந்தித்தது.
2. வங்காளதேசத்தை சேந்த விமானம் நாக்பூரில் அவசரமாக தரையிறக்கம்
விமானிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் வங்காளதேசத்தை சேர்ந்த சர்வதேச விமானம் நாக்பூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
3. இந்திய எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற வங்காளதேசத்தினர் கைது
இந்திய எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைய வங்காளதேசத்தினரை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
4. வங்கதேசம்: திருமண நிகழ்வில் பங்கேற்றவர்கள் மீது மின்னல் தாக்கியதில் 16 பேர் உயிரிழப்பு
வங்கதேசத்தில் திருமண நிகழ்வில் பங்கேற்றவர்கள் மீது மின்னல் தாக்கியதில் 16 பேர் உயிரிழந்தனர்.
5. கேரளாவில் முழு ஊரடங்கு: வெறிச்சோடிய சாலைகள்; அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு அனுமதி
கேரளாவில் வாரஇறுதி நாட்களான சனி, ஞாயிறுகளில் முழு ஊரடங்கை முன்னிட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.