ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு


ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு
x
தினத்தந்தி 7 July 2021 2:17 PM GMT (Updated: 7 July 2021 2:17 PM GMT)

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சரை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.

டெஹ்ரான்,

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அரசு முறைப்பயணமாக நாளை ரஷ்யா செல்ல உள்ளார். அதற்கு முன்பாக இன்று அவர் ஈரான் சென்றுள்ளார். அங்கு அவரை ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் சாரிஃப் வரவேற்றார்.

அதன் பின்னர் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசப்பட்டதாக டெல்லியில் உள்ள ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது.

இன்றைய சந்திப்பை தொடர்ந்து நாளை அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின் போது இந்தியா-ரஷ்யா இடையே புதிய ஒப்பந்தங்கள் குறித்து பேச வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story