உலக செய்திகள்

லெபனானில் பயிற்சி விமானம் விபத்து - 3 பேர் உயிரிழந்ததாக தகவல் + "||" + Training plane crashes in Lebanon 3 feared dead

லெபனானில் பயிற்சி விமானம் விபத்து - 3 பேர் உயிரிழந்ததாக தகவல்

லெபனானில் பயிற்சி விமானம் விபத்து - 3 பேர் உயிரிழந்ததாக தகவல்
லெபனானில் பயிற்சி விமானம் விபத்திற்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பெய்ரூட்,

லெபனான் தலைநகர் பெய்ரூட்டிற்கு வடக்கு பகுதியில் அமைந்துள்ள கேசர்வான் மாகாணம், மலைப்பகுதிகளை கொண்டது ஆகும். இந்த பகுதியில் சிறிய ரக பயிற்சி விமானம் ஒன்று இன்றைய தினம் விபத்திற்குள்ளானது.

உள்ளூர் நேரப்படி மதியம் 1.30 மணிக்கு பெய்ரூட் விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய விமானம், 20 நிமிடங்களில் தரைக்கட்டுப்பாட்டு தளத்துடனான தொடர்பை இழந்துள்ளது. இந்த விமானத்தில் ஒரு விமானி மற்றும் 2 பயணிகள் பயணம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 3 பேரும் விபத்தில் உயிரிழந்துவிட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த பகுதியில் இன்று வானிலை மேகமூட்டத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக விமானம் மலையில் மோதி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பொம்மை குடோனில் பயங்கர தீ விபத்து தீயணைப்பு வீரர்கள் 8 மணி நேரம் போராடி அணைத்தனர்
செங்குன்றம் அருகே பொம்மை குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சுமார் 8 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
2. தென்ஆப்பிரிக்கா: மினி பஸ்கள் மோதி விபத்து - 9 பேர் பலி
தென்ஆப்பிரிக்காவின் கேப் மாகாணத்தில் மினி பஸ்கள் எதிரெதிரே மோதிய விபத்தில் சிக்கி 9 பேர் பலியாகினர்.
3. அரிசி ஏற்றுமதி நிறுவன அலுவலகத்தில் தீ விபத்து
பாரிமுனையில் உள்ள அரிசி ஏற்றுமதி நிறுவன அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. மாடியில் புகை மூட்டத்தில் சிக்கிய 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
4. பட்டாசு ஆலையில் வெடி விபத்து; உரிமையாளர் உள்பட 4 பேர் பலி
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், அந்த ஆலையின் உரிமையாளர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
5. ஏ.சி. எந்திரத்தில் கியாஸ் நிரப்பும்போது விபத்து: சிலிண்டர் வெடித்து தொழிலாளி பலி 4 பேர் படுகாயம்
சென்னையில் ஏ.சி.எந்திரத்தில் கியாஸ் நிரப்பும் போது சிலிண்டர் வெடித்து 4 பேர் படுகாயம் அடைந்தனர். ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.