உலக செய்திகள்

ரூ.1.2 கோடிக்கு விற்பனையான டாவின்சியின் மிகச்சிரிய ஓவியம் + "||" + Da Vinci painting sold for Rs 1.2 crore

ரூ.1.2 கோடிக்கு விற்பனையான டாவின்சியின் மிகச்சிரிய ஓவியம்

ரூ.1.2 கோடிக்கு விற்பனையான டாவின்சியின் மிகச்சிரிய ஓவியம்
டாவின்சி வரைந்த ‘கரடியின் தலை’ என்ற மிகச்சிறிய ஓவியம் இந்திய மதிப்பில் சுமார் 1.2 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.
லண்டன்,

இத்தாலி நாட்டில் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த லியனார்டோ டாவின்சி, உலகப் புகழ் பெற்ற ஓவியக்கலைஞர் ஆவார். இவர் வரைந்த ‘மோனலிசா’ ஓவியம் கலையுலகில் இன்று வரை அரிய பொக்கிஷமாக பார்க்கப்படுகிறது. இவரது ஓவியங்கள் ஏலம் விடப்படும் போதெல்லாம் அவை கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பனையாகின்றன.

அந்த வகையில் டாவின்சி வரைந்த ‘கரடியின் தலை’ ஓவியம் சமீபத்தில் ஏலத்திற்கு வந்தது. இந்த ஓவியமானது வெறும் 7 செண்டி மீட்டர் சதுர அளவு கொண்ட இளஞ்சிவப்பு-பழுப்பு நிற காகிதத்தில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த கலைப்பொருட்கள் சேகரிப்பாளரான தாமஸ் காப்லன் என்பவரிடம் இந்த ஓவியம் இருந்து வந்தது. இதனை அவர் கடந்த 2008 ஆம் ஆண்டு லண்டனைச் சேர்ந்த கலைப்பொருள் விற்பனையாளர் தாமஸ் வான் ஹாஃப்டன் என்பவரிடம் இருந்து வாங்கியுள்ளார். இந்த நிலையில் தற்போது இந்த ஓவியத்தை அவர் ஏலத்தில் விட்டுள்ளார்.

இந்த ஓவியம் சுமார் 11 மில்லியன் டாலருக்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 12.2 மில்லியன் டாலருக்கு விற்பனையாகியுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 1.2 கோடி ரூபாய் ஆகும். இதற்கு முந்தைய சாதனையாக டாவின்சியின் ‘ஹார்ஸ் அண்ட் ரைடர்’ ஓவியம் 1.1 கோடி ரூபாய்க்கு கடந்த 2001 ஆம் ஆண்டு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிகமாக பட்டாசுகள் விற்பனை செய்ய விண்ணப்பிக்கலாம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிகமாக பட்டாசுகள் விற்பனை செய்ய விண்ணப்பிக்கலாம் மாவட்ட கலெக்டர் தகவல்.
2. மதுரையில் குழந்தைகள் விற்பனை: தலைமறைவாக இருந்த காப்பக நிறுவனர் கைது
மதுரையில் குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் தலைமறைவாக இருந்த காப்பக நிறுவனர் கைது செய்யப்பட்டார். கேரளாவுக்கு தப்பிச்செல்ல முயன்ற போது சிக்கினார்.
3. மும்பையில் பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்து விற்பனை
மராட்டியத்தின் மும்பை நகரில் பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
4. சென்னையில் 2 நாளில் மட்டும் 3,790 டன் காய்கறி விற்பனை கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தகவல்
சென்னையில் 2 நாளில் மட்டும் 3,790 டன் காய்கறி விற்பனை கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தகவல்.
5. திருவாரூர் மாவட்டத்தில் வாகனங்கள் மூலம் ஒரே நாளில் 9 டன் காய்கறி, பழங்கள் விற்பனை
திருவாரூர் மாவட்டத்தில் வாகனங்கள் மூலம் ஒரே நாளில் 9 டன் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.