உலக செய்திகள்

குடிசை தீயில் எரிந்து நாசம் + "||" + Cottage

குடிசை தீயில் எரிந்து நாசம்

குடிசை தீயில் எரிந்து நாசம்
குடிசை தீயில் எரிந்து நாசம்
கறம்பக்குடி, ஜூலை.10-
கறம்பக்குடி அருகே உள்ள குரும்பி வயலை சேர்ந்தவர் விமலா தங்கப்பா. சம்பவத்தன்று இவர் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக இவரது குடிசையில் தீப்பிடித்தது. தீ வேகமாக குடிசையில் பரவியதால் அதிர்ச்சி அடைந்த விமலா தங்கப்பா குடிசையில்இருந்து வெளியே ஓடி வந்து கூச்சலிட்டார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தண்ணீரை ஊற்றி தீயை மேலும் பரவவிடாமல் தடுத்து அணைத்தனர். எனினும் இதில் குடிசை முழுவதும் எரிந்து நாசமானது. வீட்டில் இருந்த பணம், நகை, துணிகள், பாத்திரம் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் கருகின. இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி துணை தாசில்தார் ராமசாமி, மழையூர் வருவாய் ஆய்வாளர் அன்னக்கொடி, கிராம நிர்வாக அதிகாரி செல்லத்துரை ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று தீயால் சேதமடைந்த குடிசையை பார்வையிட்டனர். பின்னர் தீவிபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.5 ஆயிரம் நிவாரண நிதி மற்றும் அரிசி, பருப்பு, வேட்டி, சேலை போன்றவற்றை வழங்கினர்.

தொடர்புடைய செய்திகள்

1. குடிசை தீயில் எரிந்து நாசம்
குடிசை தீயில் எரிந்து நாசம்