இந்தோனேசியாவில் கொரோனா தொற்றுக்கு மேலும் 871 பேர் பலி


இந்தோனேசியாவில் கொரோனா தொற்றுக்கு மேலும் 871 பேர் பலி
x
தினத்தந்தி 9 July 2021 5:53 PM GMT (Updated: 2021-07-09T23:23:31+05:30)

இந்தோனேசியாவில் கொரோனா தொற்றுக்கு மேலும் 871 பேர் பலி

ஜகார்த்தா,

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18.63 கோடியை தாண்டி உள்ளது.

இந்நிலையில் இந்தோனேசியாவில் அதிகபட்ச அளவாக கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38,124  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதன்மூலம் இந்தோனேசியாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது  24,55,912 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 871 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 64 ஆயிரத்து 631 ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேசியாவில் கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 28,975 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளநிலையில், இதுவரை 20,23,548 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 
3,67,733 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story