உலக செய்திகள்

கோவேக்சின் தடுப்பூசி விவகாரத்தில் இன்னும் 4-6 வாரங்களில் முடிவு- உலக சுகாதார அமைப்பு + "||" + Decision On Emergency Use Listing Of Covaxin Likely In 4-6 Weeks: WHO

கோவேக்சின் தடுப்பூசி விவகாரத்தில் இன்னும் 4-6 வாரங்களில் முடிவு- உலக சுகாதார அமைப்பு

கோவேக்சின் தடுப்பூசி விவகாரத்தில்  இன்னும் 4-6 வாரங்களில் முடிவு- உலக சுகாதார அமைப்பு
கோவேச்கின் தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து 4-6 வாரங்களில் முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜெனீவா,

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவேக்சின் தடுப்பூசிக்கு  இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

எனினும்,  இந்த தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அண்மையில்,  கோவேக்சின் தடுப்பூசி நிறுவனம் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகளையும் செயல் திறன் பற்றிய தரவுகளையும் வெளியிட்டது. 

இந்த நிலையில்,  அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஏற்பாடு செய்திருந்த இணைய கருத்தரங்கு ஒன்றில் பேசிய உலக சுகாதார அமைப்பின்  தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன், “ அடுத்த 4- 6 வாரங்களில் கோவேச்கின் தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்த முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளது” என்றார். 

மேலும்,  பாரத் பயோடெக் நிறுவனத்தின் மொத்த தரவுகளும் உலக சுகாதார அமைப்புக்கு கிடைத்து வருவதாகவும் நிபுணர் குழுவால் இது ஆய்வு செய்யப்படும் எனவும்  தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

1. தடுப்பூசி தட்டுப்பாடு; கோவேக்சின் முதல் டோஸ் செலுத்தப்படுவதில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக கோவேக்சின் முதல் டோஸ் தடுப்பூசி தற்போது செலுத்தப்படுவதில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
2. உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியுடன் சுகாதார மந்திரி சந்திப்பு
கொரோனாவுக்கு எதிராக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒரே தடுப்பூசி கோவேக்சின் ஆகும். பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த இந்த தடுப்பூசியை பல நாடுகள் இன்னும் அங்கீகரிக்கவில்லை. மேலும் உலக சுகாதார நிறுவனமும் இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை.
3. கோவிஷீல்டு உற்பத்தி திறன் 120 மில்லியனாக அதிகரிக்கப்படும்: மத்திய அரசு
கோவிஷீல்டு உற்பத்தி திறன் 120 மில்லியனாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
4. கோவேக்சின் டெல்டா பிளஸ் கொரோனாவுக்கு எதிராக செயல் திறன் மிக்கது: ஆய்வில் தகவல்
டெல்டா பிளஸ் கொரோனாவுக்கு எதிராக கோவாக்சின் சிறப்பாக செயல்படுகிறது என ஐசிஎம்ஆர் ஆய்வில் தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
5. கோவேக்சின் மருத்துவ பரிசோதனைக்கு அனுமதி ரத்து: பிரேசில்
கோவேக்சின் தடுப்பூசி ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதாக பெரும் சர்ச்சையைான நிலையில், பிரேசிலுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்தது.