பிரேசிலில் புதிதாக 17,031 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 765 பேர் பலி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 13 July 2021 1:02 AM GMT (Updated: 13 July 2021 1:02 AM GMT)

பிரேசில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,031 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரேசிலியா,

தென்அமெரிக்க நாடுகளில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முதல் நாடாக பிரேசில் உள்ளது. மேலும் உலக அளவில் கொரோனா உயிரிழப்பில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்திலும், கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, இந்தியாவுக்கு அடுத்து 3-வது இடத்திலும் பிரேசில் உள்ளது. 

இந்நிலையில் பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,031 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 91 லட்சத்து 06 ஆயிரத்து 971 ஆக அதிகரித்துள்ளது. 

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மேலும் 765 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,34,311 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1,76,66,654 பேர் குணமடைந்துள்ளனர், தற்போது 9,06,006 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Next Story