பிரான்சில் புதிய கொரோனா விதிமுறைகள்: தடுப்பூசிகள் செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 13 July 2021 10:24 PM GMT (Updated: 13 July 2021 10:24 PM GMT)

பிரான்சில் அறிவிக்கப்பட்ட புதிய கொரோனா விதிமுறைகளால், மக்களிடம் தடுப்பூசிகள் செலுத்திக்கொள்ளும் வேகம் அதிகரித்துள்ளது.

பாரீஸ்,

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா புதுப்புது அவதாரம் எடுத்து மக்களை வேட்டையாடி வருகிறது. இதனிடையே பிரான்சில் கடந்த சில நாட்களாக டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 

முன்னதாக, இந்த கொரோனா பரவல் 4-வது அலைக்கு வித்திடும் என்றும், செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் 4-வது அலையின் வீரியம் அதிகமாக இருக்கும் என்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இதில் இருந்து தப்பிக்கலாம் என்றும், அரசின் அறிவியல் ஆலோசகரும், பேராசிரியருமான ஜீயன் பிரான்சிஸ் டெல்பிரைசி தெரிவித்திருந்தார்.  

இந்நிலையில் பிரான்சில் மதுபான விடுதிகள் மற்றும் ஓட்டலுக்கு வரும் நபர்களும், ரெயில் மற்றும் விமானங்களில் பயணிப்பவர்களும் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களாக இருக்க வேண்டும் அல்லது தங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த நடைமுறை அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பினைத்தொடர்ந்து பிரான்சில் ஒரேநாளில் 9 லட்சத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவினை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Next Story