அர்ஜென்டினாவில் ஒரே நாளில் 20,023 பேருக்கு கொரோனா பாதிப்பு


அர்ஜென்டினாவில் ஒரே நாளில் 20,023 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 14 July 2021 12:46 AM GMT (Updated: 14 July 2021 12:46 AM GMT)

அர்ஜென்டினாவில் தற்போது 2.68 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பியூனோஸ் ஐர்ஸ்,

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அர்ஜென்டினா 8-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அர்ஜென்டினாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,023 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அங்கு இதுவரை பதிவு செய்யப்பட்ட கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 46.82 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும் ஒரே நாளில் 385 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, அங்கு கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 99 ஆயிரத்து 640 ஆக உள்ளது.

அதே சமயம் அர்ஜெண்டினாவில் இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 43.14 லட்சத்தை தாண்டியுள்ளது. அங்கு தற்போது 2.68 லட்சத்துக்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story