உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18.85 கோடியாக உயர்வு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 14 July 2021 1:26 AM GMT (Updated: 14 July 2021 1:26 AM GMT)

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 17.24 கோடியை தாண்டியது.

ஜெனீவா,

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 18.85 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 18,85,74,061 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 17,24,03,966 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 40 லட்சத்து 65 ஆயிரத்து 269 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா தொற்றுக்கு தற்போது 1,21,04,826 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 78,782 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா  -  பாதிப்பு-  3,48,06,456, உயிரிழப்பு -  6,23,420, குணமடைந்தோர் - 2,93,04,162
இந்தியா   -   பாதிப்பு - 3,09,44,949, உயிரிழப்பு -  4,11,439, குணமடைந்தோர் - 3,00,97,096
பிரேசில்   -   பாதிப்பு - 1,91,52,065, உயிரிழப்பு -  5,35,924, குணமடைந்தோர் - 1,77,70,617
ரஷ்யா    -   பாதிப்பு -  58,33,175, உயிரிழப்பு -  1,44,492, குணமடைந்தோர் -   52,36,214 
பிரான்ஸ்    - பாதிப்பு -  58,20,849, உயிரிழப்பு -  1,11,407, குணமடைந்தோர் -   56,50,969

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

துருக்கி      - 54,93,244
இங்கிலாந்து  - 51,91,459
அர்ஜெண்டினா- 46,82,960
கொலம்பியா -  45,48,142
இத்தாலி     - 42,73,693
ஸ்பெயின்    - 40,15,084
ஜெர்மனி     - 37,45,287
ஈரான்        - 34,17,029
போலந்து    - 28,80,959
இந்தோனேசியா- 26,15,529

Next Story