அமெரிக்காவில் கடந்த ஆண்டில் போதைப்பொருளால் 93 ஆயிரம் பேர் உயிரிழப்பு


அமெரிக்காவில் கடந்த ஆண்டில் போதைப்பொருளால் 93 ஆயிரம் பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 15 July 2021 3:52 AM GMT (Updated: 15 July 2021 3:52 AM GMT)

அமெரிக்காவில் கடந்த ஆண்டில் போதைப்பொருளால் 93 ஆயிரம் பேர் இறந்திருக்கிறார்கள்.

நியூயார்க், 

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் மரணங்களுக்கு மத்தியில், அதிகப்படியான போதைப்பொருட்களை எடுத்துக்கொண்டதால் கடந்த ஆண்டில் 93 ஆயிரம் பேர் இறந்திருக்கிறார்கள். 2019-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 72 ஆயிரமாக இருந்தது. ஆக, 2020-ம் ஆண்டு மிதமிஞ்சிய அளவில் போதைப்பொருட்களை எடுத்துக்கொண்டதால் இறப்பு எண்ணிக்கை 29 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள பிரவுன் பல்கலைக்கழக பொது சுகாதார ஆராய்ச்சியாளர் பிராண்டன் மார்ஷல் கூறுகையில், “இது மனித உயிர்களின் அதிர்ச்சியூட்டும் இழப்பு” என வேதனையுடன் தெரிவித்தார்.

ஊரடங்குகளும், பிற கொரோனா கட்டுப்பாடுகளும் இந்த போதை அடிமைகளை தனிமைப்படுத்தி சிகிச்சை பெறுவதை கடினமாக்கி விட்டது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Next Story