ஜெர்மனியில் தொடர் மழை, வெள்ள பெருக்கு; 30 பேர் மாயம்: மீட்பு பணியில் ராணுவம்


ஜெர்மனியில் தொடர் மழை, வெள்ள பெருக்கு; 30 பேர் மாயம்:  மீட்பு பணியில் ராணுவம்
x
தினத்தந்தி 15 July 2021 9:53 AM GMT (Updated: 15 July 2021 9:53 AM GMT)

ஜெர்மனியில் தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ள பெருக்கை அடுத்து 30 பேர் காணாமல் போயுள்ளனர்.


பெர்லின்,

ஜெர்மனியின் மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.  இதில், மழையால் நேற்றிரவு வெள்ள பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து கொண்டது.

அந்நாட்டின் ரைன்லேண்ட்-பேலட்டினேட் நகரில் ஸ்கல்டு என்ற டவுன் பகுதியில் நேற்றிரவு மழைக்கு 6 வீடுகள் இடிந்து விழுந்தன.

இதுதவிர, 25 வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன.  30 பேர் வரை காணாமல் போயிருக்கின்றனர்.  எனினும் அவர்களின் சரியான எண்ணிக்கை தெரிய வரவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஒரு சில இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து, அதிலிருந்து வெளியே வரமுடியாமல் உள்ளூர்வாசிகள் தவித்து வரும் சூழலும் காணப்படுகிறது.  வான்வழியே வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு அவர்களை காப்பாற்ற வேண்டிய நிலை காணப்படுகிறது.

இதனால் போலீசாரோடு சேர்ந்து, ஜெர்மனியின் ராணுவமும் மீட்பு பணியின் ஒரு பகுதியாக செயல்பட்டு வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டும் வருகிறது.


Next Story