உலக செய்திகள்

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் பலி + "||" + Two Pak Army personnel killed in terrorist attack in Balochistan

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் பலி

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் பலி
பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அங்கு கடலோர நகரமான பாஸ்னியில் குடா பாக்ஸ் பஜார் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ஐ.இ.டி. என்னும் வெடிக்கும் சாதனத்தைக் கொண்டு நடத்திய இந்த தாக்குதலில் ஒரு ராணுவ அதிகாரியும், ஒரு சிப்பாயும் உயிரிழந்தனர். அவர்கள் கேப்டன் அபான் மசூத், சிப்பாய் பாபர் ஜமான் ஆவார்கள்.

இது குறித்து பாகிஸ்தான் ராணுவ மக்கள் தொடர்பு சேவை ஐ.எஸ்.பி.ஆர். விடுத்துள்ள அறிக்கையில், “இந்த தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்வதற்கான தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. இத்தகைய கோழைத்தனமான செயல்களால் பலுசிஸ்தானில் ஏற்பட்டுள்ள அமைதியையும், வளத்தையும் குலைத்து விட முடியாது. இதுபோன்ற பயங்கரவாத சக்திகளை என்ன விலை கொடுத்தாவது வீழ்த்துவதற்கு பாதுகாப்பு படைகள் உறுதி கொண்டுள்ளன” என கூறப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. சோமாலியாவில் விமான நிலையத்தில் நில கண்ணிவெடி தாக்குதல்; 5 பேர் காயம்
சோமாலியாவில் விமான நிலையம் உள்ளே ஏற்பட்ட நிலக்கண்ணி வெடி தாக்குதலில் 5 பேர் காயமடைந்து உள்ளனர்.
2. கார் மீது போலீஸ் வேன் மோதி கணவன்- மனைவி பலி
போலீஸ் வேன், கார் மீது மோதியதில் பேரன் பிறந்தநாள் விழாவுக்கு சென்ற கணவன்- மனைவி பலியாகினர். 7 பேர் காயமடைந்தனர்.
3. ஐ.நா. கவுன்சில் கூட்டம்: காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இந்தியா பதிலடி கொடுத்தது.
4. தந்தை, மகளை தாக்கிய வாலிபர் மீது வழக்கு
நச்சலூர் அருகே தந்தை, மகளை தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
5. விஷவண்டு கடித்து சப்-இன்ஸ்பெக்டர் பலி
விஷவண்டு கடித்து சப்-இன்ஸ்பெக்டர் பலி.