இங்கிலாந்தில் கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவாக தினசரி கொரோனா பாதிப்பு உயர்வு


இங்கிலாந்தில் கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவாக தினசரி கொரோனா பாதிப்பு உயர்வு
x
தினத்தந்தி 16 July 2021 6:19 PM GMT (Updated: 16 July 2021 6:19 PM GMT)

இங்கிலாந்தில் கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

லண்டன்,

இங்கிலாந்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 51,870- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்று பாதிப்பு காரணமாக 49- பேர் உயிரிழந்துள்ளனர். 

இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த இன்னும் சில தினங்களே எஞ்சியுள்ள நிலையில், அந்நாட்டில் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்துள்ளது. மருத்துவ நிபுணர்களின் எச்சரிக்கையையும் மீறி இங்கிலாந்தில்  சமூக இடைவெளி கட்டுப்பாடுகள், மாஸ்க் அணியும் விதிமுறைகள் உள்பட கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த அந்நாட்டு அரசு தயாராகி வருகிறது. 


Next Story