ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25,704 பேருக்கு கொரோனா


ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25,704 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 17 July 2021 12:13 AM GMT (Updated: 17 July 2021 12:13 AM GMT)

ரஷ்யாவில் தற்போது 4.60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாஸ்கோ,

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா 4-வது இடத்தில் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், அங்கு கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றின் தாக்கம் வேகமெடுத்து வருகிறது.
 
இந்நிலையில், ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25,704 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் இதுவரை பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 59 லட்சத்தைக் கடந்துள்ளது.
 
மேலும் ஒரே நாளில் 799 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததால், அங்கு இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 46 ஆயிரத்து 868 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் ரஷ்யாவில் கொரோனா தொற்றில் இருந்து 53 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ள நிலையில், தற்போது 4.60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story