உலக செய்திகள்

சீனாவில் மீண்டும் பரவி வரும் கொரோனா; புதிதாக 30 பேருக்கு தொற்று உறுதி + "||" + Corona re emerging in China 30 people confirmed to be infected

சீனாவில் மீண்டும் பரவி வரும் கொரோனா; புதிதாக 30 பேருக்கு தொற்று உறுதி

சீனாவில் மீண்டும் பரவி வரும் கொரோனா; புதிதாக 30 பேருக்கு தொற்று உறுதி
சீனாவில் கடந்த சில தினங்களாக மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பீஜிங், 

உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தற்போது அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்க, சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது.

இந்த நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா தலைக்காட்டத் துவங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 36 பேருக்கு தொற்று உறுதியானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

மேலும் அறிகுறி இல்லாத தொற்று பாதிப்புகளை உறுதி செய்யப்பட்ட பாதிப்பாக சீன சுகாதாரத்துறை அறிவிப்பதில்லை. அந்த வகையில் 20 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்த புதிய பாதிப்புகளின் மூலம் சீனாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 92,213 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கொரோனாவால் அங்கு இதுவரை 4,636  பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. மிசோரம் மாநிலத்தில் மேலும் 1,121 - பேருக்கு கொரோனா
மிசோரம் மாநிலத்தில் மேலும் 1,121 - பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. 'அணு ஆயுத தாக்குதல் நடத்தலாம்’ - ஆஸ்திரேலியாவுக்கு சீனா எச்சரிக்கை
ஆஸ்திரேலியா அணு ஆயுத தாக்குதலுக்கு இலக்காகலாம் என்று சீன அரசு ஊடகம் பகீரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
3. ஆந்திராவில் இன்று 1,248 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்
ஆந்திராவில் தற்போது 14,708 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. சீனாவில் மீண்டும் பரவி வரும் கொரோனா; புதிதாக 49 பேருக்கு தொற்று உறுதி
சீனாவில் கடந்த சில தினங்களாக மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
5. கர்நாடகத்தில் இன்று 1,108 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
கர்நாடகாவில் தற்போது 16,174 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.