உலக செய்திகள்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: 2 வீர‌ர்களுக்கு கொரோனா + "||" + Two athletes test positive for Covid-19 in Olympic Village, say officials AFP News Agency

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: 2 வீர‌ர்களுக்கு கொரோனா

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி:  2 வீர‌ர்களுக்கு கொரோனா
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக அமைக்கப்பட்டுள்ள கிராமத்தில் 2 வீர‌ர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டோக்கியோ, 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இன்னும் 5 நாட்களில் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்காக ஒவ்வொரு நாட்டு வீரர், வீராங்கனைகள், அதிகாரிகள் அடங்கிய அணி ஜப்பானை நோக்கி படையெடுத்த வண்ணம் இருக்கிறது. போட்டியில் பங்கேற்பவர்கள் தங்குவதற்கு நவீன வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் கிராமம் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. கொரோனா பரிசோதனைக்கு பிறகு ஒவ்வொரு அணியினரும் ஒலிம்பிக் கிராமத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் அறையில் தங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் ஒலிம்பிக் கிராமத்தில் தங்கவைக்கப்பட்டு இருப்பவர்களுக்கு நடத்தப்பட்ட வழக்கமான பரிசோதனையில் வெளிநாட்டை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அந்த நபர் ஓட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார். கொரோனாவினால் ஒருவர் பாதிக்கப்பட்டு இருக்கும் தகவலை வெளியிட்டு இருக்கும் போட்டி அமைப்பு குழுவினர் அவர் யார்? என்பது குறித்து எந்தவித விவரத்தையும் வெளியிடவில்லை. 

ஒலிம்பிக் வீரர்கள் தங்கிய ஓட்டல் ஊழியர்களுக்கு கொரோனா, போட்டி அமைப்பு குழுவினர் ஏற்பாடு செய்து கொடுத்த இடத்தில் தங்கியவருக்கு கொரோனா பாதிப்பு என்று செய்திகள் வெளியான நிலையில் முதல்முறையாக ஒட்டு மொத்த வீரர்களும் தங்கும் ஒலிம்பிக் கிராமத்திலேயே கொரோனா தொற்று ஊடுருவி இருப்பது பரபரப்பையையும், அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தநிலையில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக அமைக்கப்பட்டுள்ள கிராமத்தில் 2 வீர‌ர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. கஷ்ட காலத்தில் உதவிய 150 லாரி டிரைவர்களுக்கு விருந்து ; மனிதே நேய மங்கை மீராபாய் சானு
பளுதூக்குதல்தான் தன்னுடைய எதிர்காலம் என மீரா பாய் சானு முடிவு செய்தாலும் பயிற்சியை விட அதற்காக அவர் மேற்கொள்ளும் பயணம் மிகவும் சிரமத்தை கொடுத்துள்ளது.
2. ஒலிம்பிக் போட்டி நடைபெறும் டோக்கியோ நகரில் மர்ம நபர் தாக்குதல்;மாணவி உள்பட 10 பேர் காயம்
ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வரும் டோக்கியோ நகரில் ரெயிலில் பயணித்த மர்ம நபர் கத்தியால் தாக்கியதில் 10 பேர் காயமடைந்தனர்.
3. டோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் குத்து சண்டை காலிறுதியில் இந்திய வீராங்கனை வெற்றி; பதக்கம் உறுதி
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் மகளிர் குத்து சண்டை காலிறுதியில் இந்திய வீராங்கனை லவ்லினா வெற்றி பெற்று பதக்கம் உறுதி செய்துள்ளார்.
4. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பிரிவில் இந்திய வீரர் தோல்வி
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பிரிவில் இந்திய வீரர் அவினாஷ் முகுந்த் சேபிள் தோல்வி அடைந்துள்ளார்.
5. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி; துப்பாக்கி சுடுதலில் இந்திய ஜோடி ஸ்டேஜ் 2க்கு தகுதி
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் மானு பாக்கர் மற்றும் சவுரப் சவுத்ரி இணை ஸ்டேஜ் 2க்கு தகுதி பெற்றுள்ளது.