உலக செய்திகள்

அமெரிக்காவில் குழந்தைகள் பூங்காவில் ரசாயன கசிவு; 60 பேருக்கு பாதிப்பு + "||" + Chemical leak at a children's park in the United States; Impact on 60 people

அமெரிக்காவில் குழந்தைகள் பூங்காவில் ரசாயன கசிவு; 60 பேருக்கு பாதிப்பு

அமெரிக்காவில் குழந்தைகள் பூங்காவில் ரசாயன கசிவு; 60 பேருக்கு பாதிப்பு
அமெரிக்காவில் குழந்தைகளுக்கான நீர்பூங்காவில் ஏற்பட்ட ரசாயன கசிவால் 60 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

நியூயார்க்,

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஸ்பிரிங் பகுதியில் குழந்தைகளுக்கான நீர்பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது.  இந்நிலையில், இந்த பூங்காவில் ரசாயன கசிவு ஏற்பட்டு உள்ளது.  இதனால் தோல் எரிச்சல் மற்றும் சுவாச பாதிப்புகள் ஏற்பட்டு 60க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்தனர்.

இந்த சம்பவம் பற்றி அறிந்து தீயணைப்பு படை வீரர்களும் பூங்காவுக்கு வந்து மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.  அவர்களில் 26 பேர் உள்ளூர் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

எனினும், பாதிக்கப்பட்ட வேறு 39 பேர் சிகிச்சைக்கு செல்ல மறுத்து உள்ளனர் என நியூயார்க் போஸ்ட் தெரிவித்து உள்ளது.  கந்தக அமிலம் மற்றும் ரசாயன பொருட்கள் கலந்து இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும் என கூறப்படுகிறது.  இதனையடுத்து அந்த பூங்கா மூடப்பட்டு உள்ளது.  


தொடர்புடைய செய்திகள்

1. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 98 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 98 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
2. கோடம்பாக்கத்தில் சாலையின் குறுக்கே விழுந்த மரம் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
கோடம்பாக்கத்தில் சாலையின் குறுக்கே விழுந்த மரம் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.
3. கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 55 பேர் பாதிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று 55 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
4. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 101 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 101 பேர் பாதிப்பு.
5. ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் ஊராட்சி தேர்தல்: வாக்குச்சாவடியில் மோதல்; வாக்குப்பதிவு பாதிப்பு
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் நடைபெற்ற ஊராட்சி தேர்தலில் வாக்குச்சாவடியில் மோதல் ஏற்பட்டு வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.