உலக செய்திகள்

தூதரை திரும்ப பெறும் ஆப்கானிஸ்தானின் முடிவு துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான் + "||" + Afghanistan's decision to withdraw ambassador is unfortunate: Pakistan

தூதரை திரும்ப பெறும் ஆப்கானிஸ்தானின் முடிவு துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்

தூதரை திரும்ப பெறும் ஆப்கானிஸ்தானின் முடிவு துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்
பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் நஜிப் அலிகேலின் 27 வயது மகள் சில்சிலா அலிகேல் கடந்த வெள்ளிக்கிழமை தலைநகர் இஸ்லாமாபாத்தில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து கடத்தல்காரர்களால் அடித்து சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்ட சில்சிலா அலிகேல் சில மணி நேரங்களுக்கு பின் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மோசமாகியுள்ளது. இந்த நிலையில் தூதரின் மகள் கடத்தப்பட்டு, சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தானில் இருக்கும் ஆப்கானிஸ்தான் தூதர் மற்றும் மூத்த தூதரக அதிகாரிகள் அனைவரையும் திரும்ப அழைக்க ஆப்கானிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அரசின் இந்த முடிவு துரதிர்ஷ்டவசமானது மற்றும் வருந்தத்தக்கது என பாகிஸ்தான் கூறியுள்ளது. மேலும் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் ஆப்கானிஸ்தானை வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘பாகிஸ்தானில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம், தூதரகத்தின் தூதர் அவரது குடும்பத்தினர் மற்றும் தூதரக ஊழியர்களின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் தூதர் மற்றும் மூத்த தூதரக அதிகாரிகளை திரும்ப அழைக்கும் ஆப்கானிஸ்தான் அரசின் முடிவு துரதிர்ஷ்டவசமானது மற்றும் வருந்தத்தக்கது. ஆப்கானிஸ்தான் அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம்’’ என கூறினார்.

 


தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு காஷ்மீர்; ஊடுருவல் முயற்சி முறியடிப்பு, பயங்கரவாதி கைது
ஜம்மு காஷ்மீரில் கடந்த ஒருவாரத்தில் ஏழு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. ஐ.எஸ். அமைப்பை கட்டுப்படுத்த முயற்சிக்கும் தலீபான்கள்
ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
3. ஆப்கானிஸ்தானில் முகச் சவரம் செய்ய தடை மீறினால் தண்டனை - தலீபான்கள் அறிவிப்பு
முகச் சவரம் செய்வது இஸ்லாமிய சட்டங்களை மீறுவதாக அமைந்துள்ளது. இந்தத் தடையை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என தலீபான்கள் தெரிவித்து உள்ளனர்.
4. நகரின் மையப்பகுதியில் உயிரிழந்தவர்களின் உடலை கட்டி தொங்கவிட்ட தலீபான்கள்
ஆப்கானிஸ்தானில் உயிரிழந்தவர்களின் உடலை தலீபான்கள் நகரின் மையப்பகுதியில் கட்டி தொங்கவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5. தலீபான்கள் பயணித்த கார் கண்ணிவெடி தாக்குதலில் சிக்கியது...
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் பயணித்த கண்ணிவெடி தாக்குதலில் சிக்கியது.