உலக செய்திகள்

இங்கிலாந்தில் புதிதாக 39,950- பேருக்கு கொரோனா தொற்று + "||" + COVID-19- UK reports more than 39k

இங்கிலாந்தில் புதிதாக 39,950- பேருக்கு கொரோனா தொற்று

இங்கிலாந்தில் புதிதாக 39,950- பேருக்கு கொரோனா தொற்று
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 39,950- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
லண்டன்,

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தொற்று பரவி ஒன்றரை ஆண்டுகள் ஆன போதிலும் உருமாற்றம் அடைந்து பல அலைகளாக தாக்கி வருகிறது.  குறிப்பாக தற்போது டெல்டா வகை கொரோனா 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. 

இதனால், பல்வேறு நாடுகளில் மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.  அந்த வகையில், இங்கிலாந்திலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்தொடங்கியுள்ளது.  இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 39,950 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 54.73 லட்சத்தைக் கடந்துள்ளது.
  
கொரோனா வைரசால் 19 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1,28,727 ஆக உள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து 44 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 9.40 லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அசாமில் மேலும் 412 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
அசாம் மாநிலத்தில் மேலும் 412 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. செப்டம்பர் 27: மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
தமிழ்நாட்டில் மேலும் 1,657 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. டெல்லியில் மேலும் 32 பேருக்கு கொரோனா
டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 0.06 சதவிகிதமாக உள்ளது.
4. மராட்டியத்தில் இன்று மேலும் 3,206 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் இன்று மேலும் 3,206 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
5. செப்டம்பர் 25: மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
தமிழ்நாட்டில் மேலும் 1,724 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.