ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு


ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு
x
தினத்தந்தி 20 July 2021 4:05 AM GMT (Updated: 20 July 2021 4:05 AM GMT)

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிட்னி,

ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்று பரவல் நன்கு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், அங்குள்ள மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அங்கு மீண்டும் கொரோனா பரவல் ஏற்படத் தொடங்கியுள்ளது. அதிலும், குறிப்பாக டெல்டா வகை கொரோனா பரவல் அங்கு கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுமார் 2.5 கோடி மக்கள் தொகையை கொண்ட ஆஸ்திரேலியாவில், டெல்டா வகை கொரோனா பெரும் அச்சுறுத்தலாக விளங்கக் கூடும் என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

அந்நாட்டில் 2வது அதிக மக்கள் தொகையை கொண்ட விக்டோரியா மாகாணத்தில் நேற்றைய தினம் புதிதாக 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் நேற்று முன்தினம் 16 பேருக்கு தொற்று உறுதியானது. இந்த தொற்று பாதிப்புகள் அனைத்தும் அங்குள்ள உள்ளூர் மக்களிடையே கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த விக்டோரியா மாகாணத்தில் கடந்த வாரம் 5 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு இன்றோடு முடிவடைய இருந்த நிலையில், இன்று வெளியான அறிவிப்பின்படி, அங்கு வரும் ஜூலை 27 வரை 7 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story