உலக செய்திகள்

சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா; புதிதாக 65 பேருக்கு தொற்று உறுதி + "||" + China reports 65 new corona virus cases

சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா; புதிதாக 65 பேருக்கு தொற்று உறுதி

சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா; புதிதாக 65 பேருக்கு தொற்று உறுதி
சீனாவில் கடந்த சில தினங்களாக மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பீஜிங், 

உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தற்போது அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்க, சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது.

இந்த நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா தலைக்காட்டத் துவங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 31 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது. கடந்த ஜனவரி 30 ஆம் தேதி 92 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்த நிலையில், அதன் பிறகு தற்போது பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

மேலும் அறிகுறி இல்லாத தொற்று பாதிப்புகளை உறுதி செய்யப்பட்ட பாதிப்பாக சீன சுகாதாரத்துறை அறிவிப்பதில்லை. அந்த வகையில் 19 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்த புதிய பாதிப்புகளின் மூலம் சீனாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 92,342 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கொரோனாவால் அங்கு இதுவரை 4,636  பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23.22 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 20.88 கோடியாக உயர்ந்துள்ளது.
2. சீனாவில் புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
சீனாவில் கடந்த ஓரிரு மாதங்களாக மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
3. மேற்கு வங்கத்தில் நேற்று புதிதாக 762 பேருக்கு கொரோனா
மேற்கு வங்கத்தில் தற்போது 7,674 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. கர்நாடகத்தில் நேற்று 775 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்
கர்நாடகாவில் தற்போது 13,307 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. அசாமில் இன்று 375 பேருக்கு கொரோனா; 366 பேர் டிஸ்சார்ஜ்
அசாமில் தற்போது 3,314 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.