உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் ராணுவ தளபதி வரும் 27 ஆம் தேதி இந்தியா வருகை + "||" + Afghanistan Army Commander arrives in India on the 27th

ஆப்கானிஸ்தான் ராணுவ தளபதி வரும் 27 ஆம் தேதி இந்தியா வருகை

ஆப்கானிஸ்தான் ராணுவ தளபதி வரும் 27 ஆம் தேதி இந்தியா வருகை
ஆப்கானிஸ்தான் ராணுவ தளபதி வரும் 27 ஆம் தேதி இந்தியாவிற்கு வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,

ஆப்கானிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் வாலி முகமது அஹமத்ஸாய், வரும் ஜூலை 27ஆம் தேதி இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் அவர் 27 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், இந்த சுற்றுப்பயணத்தின் போது இந்திய ராணுவ தளபதி நரவனே, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட அதிகாரிகளை அவர் சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து கடந்த இரு மாதங்களாக அமெரிக்க படையினர் விரைவாக வெளியேறி வருகின்றனர். இதன் காரணமாக அங்கு தற்போது தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் ஆப்கானிஸ்தான் ராணுவ தளபதியின் இந்திய வருகை என்பது ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.