கோவேக்சின் தடுப்பூசிக்கு அனுமதி கிடைக்குமா? உலக சுகாதார அமைப்பு பரிசீலனை


கோவேக்சின் தடுப்பூசிக்கு அனுமதி கிடைக்குமா? உலக சுகாதார அமைப்பு பரிசீலனை
x
தினத்தந்தி 20 July 2021 10:51 PM GMT (Updated: 20 July 2021 10:51 PM GMT)

பாரத் பயோடெக் நிறுவனம், உலக சுகாதார அமைப்பிடம் பல்வேறு தரவுகளுடன் விண்ணப்பித்துள்ளது.

ஐதராபாத், 

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் என்ற கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளது. எனினும், இந்த தடுப்பூசியை  உலகளாவிய பயன்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் தர வேண்டும்.

 இதன் காரணமாக அந்த அமைப்பின் அவசர கால பயன்பாட்டு உரிமத்துக்கு பாரத் பயோடெக் நிறுவனம், உலக சுகாதார அமைப்பிடம் பல்வேறு தரவுகளுடன் விண்ணப்பித்துள்ளது. இந்த தரவுகளை தற்போது பரிசீலித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டு அனுமதி அளிப்பதற்கான தேதி இனிதான் உறுதி செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிசீலனை, கோவேக்சின் தடுப்பூசியின் உலகளாவிய ஏற்பு குறித்த இறுதி முடிவுக்கு ஒரு படி நெருக்கமானது என்று பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் சுசித்ரா எல்லா கூறி உள்ளார்.

Next Story