அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு


அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு
x
தினத்தந்தி 21 July 2021 12:31 AM GMT (Updated: 21 July 2021 12:31 AM GMT)

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,098- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வாஷிங்டன்

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019- ஆம் ஆண்டு இறுதியில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா பெருந்தொற்று உலக நாடுகளை உலுக்கி வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடாக அமெரிக்கா உள்ளது. அந்நாட்டில் இதுவரை 3.50 கோடி பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுள்ளது.  

 கொரோனா தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனால், சமீப காலமாக அமெரிக்காவில் தொற்று பரவல் கணிசமாக குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக தொற்று பரவல் மெல்ல மெல்ல அதிகரிக்கத்தொடங்கியிருக்கிறது. 

குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் 41,098- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் மேலும் 220- பேர் உயிரிழந்துள்ளனர். எனினும், தடுப்பூசி குறைவாக செலுத்தப்பட்ட பகுதிகளிலேயே தொற்று பரவல் அதிகமாக காணப்படுகிறது. 

Next Story