பெகாசஸ் விவகாரத்தில் உளவு பார்க்கப்பட்டதாக வெளியான பட்டியல் தவறானது- இஸ்ரேல் நிறுவனம் விளக்கம்


பெகாசஸ் விவகாரத்தில் உளவு பார்க்கப்பட்டதாக வெளியான பட்டியல் தவறானது- இஸ்ரேல் நிறுவனம் விளக்கம்
x
தினத்தந்தி 21 July 2021 7:57 PM GMT (Updated: 21 July 2021 7:57 PM GMT)

இந்த விவகாரத்தில் வெளியாகி இருக்கும் பட்டியல் தவறானது என என்.எஸ்.ஓ. நிறுவனம் நேற்று விளக்கம் அளித்துள்ளது.

புதுடெல்லி, 

இந்தியாவில் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், மத்திய மந்திரிகள், பத்திரிகையாளர்கள் உள்பட 300 பேரின் செல்போன்கள் இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் இந்த விவகாரத்தில் வெளியாகி இருக்கும் பட்டியல் தவறானது என என்.எஸ்.ஓ. நிறுவனம் நேற்று விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பெகாசஸ் விவகாரத்தில் உளவுபார்க்கப்பட்டதாக வெளியான பட்டியல் சரியானது அல்ல. அந்த செல்போன் எண்கள் என்.எஸ்.ஓ குழுமத்துடன் தொடர்புடையது அல்ல’ என்று குறிப்பிட்டு உள்ளது. அதேநேரம் தங்கள் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் குறித்து விசாரிப்பதாகவும், தேவையான இடங்களில் அமைப்பை மூடிவிடுவோம் எனவும் அறிவித்துள்ளது.


Next Story