இந்தியாவுக்கு நாடு கடத்தினால் நிரவ் மோடி தற்கொலை செய்து கொள்ளும் ஆபத்து- லண்டன் ஐகோர்ட்டில் வக்கீல் வாதம்


இந்தியாவுக்கு நாடு கடத்தினால் நிரவ் மோடி தற்கொலை செய்து கொள்ளும் ஆபத்து- லண்டன் ஐகோர்ட்டில் வக்கீல் வாதம்
x
தினத்தந்தி 21 July 2021 8:24 PM GMT (Updated: 21 July 2021 8:24 PM GMT)

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, லண்டனுக்கு தப்பி சென்றார்.

லண்டன், 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, லண்டனுக்கு தப்பி சென்றார். இந்தியாவின் வேண்டுகோளின்பேரில், அவர் அங்கு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த கடந்த பிப்ரவரி மாதம் மாவட்ட கோர்ட்டு நீதிபதி சாம் கூசி உத்தரவிட்டார். அதற்கு இங்கிலாந்து உள்துறை மந்திரி பிரீதி படேல் ஒப்புதல் அளித்தார்.

இதைத்தொடர்ந்து, இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி லண்டன் ஐகோர்ட்டில் நிரவ் மோடி தரப்பு மனு தாக்கல் செய்தது. அம்மனு, நீதிபதி மார்ட்டின் சாம்பர்லைன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நிரவ் மோடி சார்பில் ஆஜரான வக்கீல் எட்வர்டு பிட்ஜெரால்டு கூறியதாவது:-

நிரவ் மோடி மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் மனநல நிபுணர் சான்றிதழ் கொடுத்துள்ளார். அவரை அடைக்க திட்டமிடப்பட்டுள்ள மும்பை ஆர்தர் ரோடு சிறையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த காரணங்களால் அவரை நாடு கடத்தக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story