உலக செய்திகள்

இங்கிலாந்தில் மேலும் 44,104-பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு + "||" + Uk Reports more than 45k covid case on july 22

இங்கிலாந்தில் மேலும் 44,104-பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

இங்கிலாந்தில் மேலும் 44,104-பேருக்கு கொரோனா  தொற்று பாதிப்பு
இங்கிலாந்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 55,63,006- ஆக உயர்ந்துள்ளது.
லண்டன்,

இங்கிலாந்தில் டெல்டா வகை கொரோனா பரவல் காரணமாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.  கடந்த வாரத்தில் தினசரி பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டி அதிரவைத்தது. 

இந்த நிலையில், கடந்த சில  தினங்களாக 50 ஆயிரத்திற்கு சற்றும் குறைவாக கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் 44,104-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 73- பேர் உயிரிழந்துள்ளனர். 

இங்கிலாந்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 55,63,006- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 128,896- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4,419,868- ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 10,14,242- ஆக உள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தின் புதிய கொரோனா பயண விதிகள் இந்தியர்கள் பாதிப்பு ; இந்தியா பேச்சு வார்த்தை
இங்கிலாந்து வரும் இந்திய பயணிகள் 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்கள் தடுப்பூசி செலுத்தாதவர்களாகவே கருதப்படுவார்கள் என்ற இங்கிலாந்து அரசின் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது.
2. ஆந்திராவில் மேலும் 1,179-பேருக்கு கொரோனா
ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,179- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. இங்கிலாந்தில் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
இங்கிலாந்தில் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
4. இங்கிலாந்தில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 36,100 பேருக்கு தொற்று
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36,100 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ரத்து: இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்வதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.