உலக செய்திகள்

அமெரிக்காவில் 33.9 கோடி தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் + "||" + Reports that 33.9 crore vaccine doses have been given to public in the US

அமெரிக்காவில் 33.9 கோடி தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்

அமெரிக்காவில் 33.9 கோடி தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை 33.9 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்,

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. கொரோனா வைரசால் அதிக அளவிலான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் அமெரிக்கா சந்தித்துள்ளது. அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்காவில் மாடர்னா, பைசர்/பையோஎன்டெக் மற்றும் ஜான்சன் & ஜான்சன் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 33,91,02,867 தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை 20 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) வெளியான தகவலின்படி மொத்தம் 33,84,91,374 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அமெரிக்காவில் இதுவரை 18,68,19,440 பேர் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டதாகவும், 16,18,95,045 பேர் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக் கொண்டதாகவும் அமெரிக்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இரு நாடுகளின் மோசமான உறவுக்கு அமெரிக்காவே காரணம்: சீனா குற்றச்சாட்டு
உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடுமையான மோதல் நிலவுகிறது. இரு நாடுகளின் உறவும் சுமுகமான நிலையில் இல்லை.
2. அமெரிக்காவில் 34 கோடி தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை 34 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. டெல்டா வகை கொரோனா ஆதிக்கம்: அமெரிக்காவில் மீண்டும் பாதிப்பு அதிகரிப்பு
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 60,986- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. டோக்கியோவில் அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் சந்திப்பு
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரிய நாடுகளின் வெளியுறவு மந்திரிகளிடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.
5. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,098- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.