உலக செய்திகள்

பாகிஸ்தானில் ‘டிக் டாக்' செயலிக்கு மீண்டும் தடை + "||" + In Pakistan 'tick tock' processor to the barrier again

பாகிஸ்தானில் ‘டிக் டாக்' செயலிக்கு மீண்டும் தடை

பாகிஸ்தானில் ‘டிக் டாக்' செயலிக்கு மீண்டும் தடை
பாகிஸ்தானில் ‘டிக் டாக்' செயலிக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டது.
இஸ்லாமாபாத்,

சீனாவின் தயாரிப்பான ‘டிக் டாக்' எனப்படும் வீடியோ செயலி உலகம் முழுவதும் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. பாகிஸ்தானிலும் டிக் டாக் செயலி லட்சக்கணக்கானோரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் டிக் டாக் செயலியில் மிகவும் ஆபாசமான மற்றும் எல்ஜிபிடி (ஓரின சேர்க்கையாளர்கள்) சமூகத்தினரை ஊக்குவிக்கும் வகையிலான பதிவுகள் இருப்பதாக கூறி அந்த நாட்டை சேர்ந்த பழமைவாதிகள் தொடர்ந்து அந்த செயலிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பான புகார்களின் பேரில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பாகிஸ்தான் தொலை தொடர்பு ஆணையம் முதல் முறையாக டிக் டாக் செயலிக்கு தடை விதித்தது.எனினும் ஆபாசத்தை பரப்பும் கணக்குகளை தடுப்பதாக டிக் டாக் நிறுவனம் உறுதி அளித்ததால் 10 நாட்களுக்கு பிறகு அந்த தடை நீக்கப்பட்டது.

இந்த சூழலில் கடந்த மாதம் டிக் டாக் செயலிக்கு எதிராக தனிநபர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சிந்து மாகாண ஐகோர்ட்டு அந்த செயலியை தடை செய்ய பாகிஸ்தான் தொலை தொடர்பு ஆணையத்துக்கு உத்தரவிட்டது. அதன்படி டிக் டாக் செயலிக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டது.இதை எதிர்த்து சிந்து மாகாண ஐகோர்ட்டில் தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் தடையை நீக்கி உத்தரவிட்டனர். அதேவேளையில், ஆட்சேபத்துக்குரிய பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று டிக் டாக் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது.இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவின்படி ஆட்சேபத்துக்குரிய பதிவுகளை நீக்க தவறியதாக கூறி டிக் டாக் செயலிக்கு பாகிஸ்தான் தொலை தொடர்பு ஆணையம் நேற்று மீண்டும் தடை விதித்தது.முன்னதாக தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி டிக் டாக் உள்பட சீனாவின் 100-க்கும் மேற்பட்ட செயலிகளுக்கு இந்தியா கடந்த ஆண்டு தடை விதித்தது நினைவுகூரத்தக்கது.