உலக செய்திகள்

உலக அளவில் ஆதிக்கம் செலுத்தப்போகும் டெல்டா வகை கொரோனா; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை + "||" + The world-dominant delta type corona; World Health Organization warning

உலக அளவில் ஆதிக்கம் செலுத்தப்போகும் டெல்டா வகை கொரோனா; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

உலக அளவில் ஆதிக்கம் செலுத்தப்போகும் டெல்டா வகை கொரோனா; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
இன்னும் சில மாதங்களில் டெல்டா வகை கொரோனா அனைத்து நாடுகளிலும் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தப் போவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
ஜெனீவா,

சீனாவின் உகானில் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்ந்து மாறுபாடு அடைந்து வருகிறது. இதில் சமீபத்திய மாறுபாடாக டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் போன்ற தொற்றுகள் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இதை கட்டுப்படுத்தும் பணிகளில் உலக நாடுகள் முழு மூச்சுடன் ஈடுபட்டிருக்கும் நிலையில், டெல்டா மாறுபாட்டை விட அதிக வீரியம் மற்றும் ஆபத்து நிறைந்த மற்றொரு மாறுபாடு விரைவில் ஏற்படலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

உலக அளவில் கடந்த 4 வாரங்களில் கொரோனா பாதித்தவர்களில் 75 சதவீதம் பேருக்கு டெல்டா வகை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதன் முதலில் உறுதி செய்யப்பட்ட டெல்டா வகை கொரோனா, தற்போது 124 நாடுகளில் பரவியுள்ளது. கடந்த வாரத்தை விடவும் கூடுதலாக 13 நாடுகளில் டெல்டா வகை கொரோனா தொற்றுப்பரவல் கண்டறியப்பட்டுள்ளது. 

மற்ற வகைகளைக் காட்டிலும் டெல்டா வகை அதி விரைவாக தாக்கக் கூடியது என்றும், அனைத்து நாடுகளிலும் இன்னும் சில மாதங்களில் பெருமளவு ஆதிக்கம் செலுத்தப் போவதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

பிரிட்டனில் முதலில் உறுதி செய்யப்பட்ட ஆல்ஃபா வகை 180 நாடுகளிலும், தென் ஆப்பிரிக்காவில் உறுதி செய்யப்பட்ட பீட்டா வகை 130 நாடுகளிலும், பிரேசிலில் உறுதி செய்யப்பட்ட காமா வகை 78 நாடுகளிலும் பரவியுள்ளது. கிழக்கு பசிபிக் பகுதிகளில் 30 சதவீதமும், ஐரோப்பிய பகுதிகளில் 21 சதவீதமும் தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

1. உலக அளவில், அக்டோபருக்குப்பின் வாராந்திர கொரோனா பலி எண்ணிக்கை சரிவு - உலக சுகாதார அமைப்பு தகவல்
உலக அளவில், அக்டோபருக்குப்பின் வாராந்திர கொரோனா பலி எண்ணிக்கை சரிந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
2. உலக அளவில் கொரோனா இறப்பு விகிதம் 2 முதல் 3 மடங்கு அதிகம் இருக்கும் - உலக சுகாதார அமைப்பு தகவல்
உலக அளவில் கொரோனா இறப்பு விகிதம் 2 முதல் 3 மடங்கு அதிகம் இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
3. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 14.18 கோடியை தாண்டியது
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 14.18 கோடியை தாண்டியுள்ளது.
4. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12.12 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12.12 கோடியை தாண்டியுள்ளது.
5. உலக அளவில் அதிக தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டதில் இந்தியா 3-வது இடம்
உலக அளவில் அதிக டோஸ்கள் பயன்படுத்திய நாடுகளில் இந்தியா 3-ம் இடத்தை பெற்று இருக்கிறது.