உலக செய்திகள்

பாகிஸ்தான் முன்னாள் தூதர் மகள் சுட்டுக்கொலை + "||" + Daughter of ex-Pakistan envoy to South Korea & Kazakhstan murdered in Islamabad

பாகிஸ்தான் முன்னாள் தூதர் மகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தான் முன்னாள் தூதர் மகள் சுட்டுக்கொலை
ஜாபருடனான உறவை துண்டித்து கொண்டதால் ஜாபர் என்பவர் நூரை கொலை செய்து உள்ளார்
இஸ்லாமாபாத்

பாகிஸ்தான் முன்னாள் தூதர் சவுகத் அலி முகதாமின் மகள் நூர் முகாதம் (27) செவ்வாய்க்கிழமை இரவு இஸ்லாமாபாத்தில் உள்ள அவரது வீட்டில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். சவுகத் அலி முகாதம்  தென் கொரியாவில் பாகிஸ்தானின் தூதராக இருந்துள்ளார். கஜகஸ்தானுக்கான பாகிஸ்தான் தூதராகவும் பணியாற்றியுள்ளார்.

இதுதொடர்பாக,  ஜாகீர் ஜாபர் என்ற நபரும், நூரின் நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.குற்றம்சாட்டப்பட்ட ஜாபர், இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு பெரிய கட்டுமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியின் மகன் ஆவார்.

ஜாபருடனான உறவை நூர் துண்டித்து கொண்டதால் ஜாபர் நூரை கொலை செய்து உள்ளார்.கொலையாளி போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் அவருக்கு உளவியல் பிரச்சினைகள் இருப்பதாகவும் போலீசார் கூறி உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானுக்கு எதிரான டி20: இங். அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
பாகிஸ்தானுக்கு எதிரான டி 20 தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வென்றது.
2. பாகிஸ்தானில் பஸ்-லாரி மோதி விபத்து 30 பேர் பலி
பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் பஸ்-லாரி மோதிய விபத்தில் 30 பேர் பலியானார்கள்.
3. 2வது டி20 போட்டி: 45 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இங்கிலாந்து
இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
4. ஆப்கானிஸ்தான் தூதரின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது- பாக்.வெளியுறவு அமைச்சகம்
பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தான் தூதரின் மகள் கடத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
5. பாக். வான்வெளியை பயன்படுத்துவதை இந்திய விமானப்படை விமானம் தவிர்த்ததாக தகவல்
ஆப்கானிஸ்தானில் இருந்து தூதரக ஊழியர்களை அழைத்து வந்த இந்திய விமானப்படை விமானம் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்தவில்லை எனத்தகவல் வெளியாகியுள்ளது.